‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் - ஒரு பார்வை | திக்குகள் எட்டும் | ரூபன் சிவராஜா
Description
அமெரிக்க கருப்பினத்தவரான George Floyd அமெரிக்க வெள்ளையினக் காவல்துறையினால் குரல்வளை நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட போது George Floyd இருபது தடவைகள் சொன்ன 'ஒரே வார்த்தை'. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளாவிய அதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு நாடுகளில் இன-நிறவெறிக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரண்டனர். ‘Vi puster fortsatt - நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ - இது ஜொகான் சண்முகரத்தினம் எழுதி இந்த ஆண்டு, ஒக்ரோபர் மாதம் வெளிவந்த புத்தகம்.
George Floyd படுகொலையின் புறக்காரணிகளுக்கும் இந்தப் புத்தகத்தின் பேசுபொருளுக்கும் தொடர்புள்ளது. ஆம், இது இனவாதம் பற்றிய புத்தகம். இதன் பேசுபொருள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. எதனை அவாவுகின்றது, எத்தகைய விளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பது தொடர்பான சில குறிப்புகளை இவ்வத்தியாயத்தியில் பதிவுசெய்ய விழைகிறேன்.